search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு"

    • தண்ணீர் தொட்டியின் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் இருந்து வந்துள்ளது.
    • தண்ணீர் தொட்டி கட்டித் தருவதற்கான அனுமதியை ரம்யாவின் கணவர் ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கிணறு பகுதியில் ஊராட்சியின் 5-வது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் அந்தப் பகுதி மக்களின் வசதிக்காக சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டி ஒன்றைக் கட்டித் தந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டியின் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் இருந்து வந்துள்ளது. மேலும் தண்ணீர் தொட்டி கட்டித் தருவதற்கான அனுமதியை ரம்யாவின் கணவர் ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை.

    இந்த நிலையில் நாரைக்கிணறு ஊராட்சி சார்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாரை கிணறு அருகே உள்ள செலம்பன் காடு தோட்டத்தைச் சேர்ந்த செலம்பன் மனைவி பாப்பாத்தி (வயது 55) மற்றும் சுப்புலட்சுமி உள்பட சிலர் அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக பாப்பாத்தி சென்று உள்ளார். அப்போது அழுத்தம் தாங்காமல் திடீரென்று தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க சென்ற பாப்பாத்தி இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலியானார். சுப்புலட்சுமி லேசான காயமடைந்தார்.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஊராட்சியின் 5-வது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் ஊராட்சியின் அனுமதி இன்றி தண்ணீர் தொட்டி கட்டியதை கண்காணிக்க தவறியதாக நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் கருணாகரனை நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    ×